நல்ல நாள்லேயே செய்தியோட உண்மைத்தன்மையை உறுதி படுத்திக்கறது பாடு. இதுல இப்படி எல்லாம் நடந்தா எதை நம்பறது எதை விடறது? உலகே மாயம்ன்னு சொல்லிட்டு போயிடலாம் போலிருக்கு,
டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா செய்தி போட்டாங்க. மிட்சல் ஜான்சன்னு ஒரு ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் வீரரை பேட்டி எடுத்ததா. ஜஸ்ப்ரித் பும்ராவ சிலாகிச்சு சொல்லி இருந்ததா.
அதுக்கு மிட்சல் ட்வீட் பண்ணார்: "இது எங்கேந்து வந்துது? இத யார் எழுதினாங்க. இதுல சிலதோட ஒத்துப்போறேன்தான். நா யார் கூடயும் உக்காந்து இப்படி பேட்டி கொடுக்கவே இல்லையே?" அப்பறம் "முதல்ல நா மெல்போர்ன்லயே இல்லையே? இந்த செய்தியாளர் கூட கேள்வி பதில் நிகழ்ச்சின்னு ஒண்ணுத்துக்கு உக்காரவே இல்லியே! முதல் ரெண்டு டெஸ்ட் சமயம் நான் நிறைய ஜர்னலிஸ்ட்கிட்ட பேசினது உண்மைதான். ஆனா எந்த பேட்டிக்கும், ரிகார்டிங்க்கும் நான் அனுமதி தரவே இல்லை. மத்தவங்ககிட்ட காஷுவலா பேசினத இப்படி எழுதினா அதில ப்ரைவசி இஸ்யூ இருக்கு. "
டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா மிட்சல்லுக்கு டிவீட் செஞ்சது. நாங்க அந்த ஆர்டிகிலை 'அன்பப்ளிஷ் செய்யபோறோம். எதாவது இஸ்யூ இருந்தா டிஎம்ல சொல்லுங்க." இது ஞாயித்துக்கிழமை.
இன்னைக்கு சொல்றாங்க. "அப்படி உக்காந்து பேட்டி எடுக்கலதான் . நின்னுகிட்டுதான் பேசினாங்க. அவரோட கமென்ட்ரிக்கு நடு நடுவே பேசினத அடிப்படையா வெச்சுத்தான் இது எழுதி இருக்கு. மிட்சலோட லேசான நினைவு சக்தியை வலுப்படுத்த தோ பாரு போட்டோ!"
பேட்டின்னா ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு புரிதல் இருக்க வேணாமா? சும்மா பேசிட்டு அத செய்தியா போடலாமா? இங்க வேணா அப்படி நடக்கும். அங்கே எல்லாம் பேட்டின்னா காசு கொடுக்கணும். இல்லை ப்ரீன்னு புரிதல் இருக்கணும் இல்லையா?
வெளங்கிரும்!

எல்லாக்குட்டையும் மோசமானது தான்! சுத்தமானது எதுவும் இல்லை. :(
ReplyDelete