வணக்கம்.
இன்றைய செய்தி ஊடகங்கள் குறித்து உங்களுக்கு திருப்தி இருக்கிறதா? அவர்களது வேலையை சரியாக செய்வதாக நினைக்கிறீர்களா? அவர்களது ரிபோர்டிங் நடுநிலையாக இருப்பதாக நினைக்கிறீர்களா? பார்வை சரியாக இருக்கறதாக நினைக்கிறீர்களா? எல்லா செய்திகளும் இல்லாவிட்டாலும் முக்கால்வாசி செய்திகளாவது பாசிடிவ்வாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஆமாம் என்றால்...
அதிசயபிறவி சார் நீங்க! எங்க கால காட்டுங்க கும்புட்டுக்கறேன். போய் வாங்க சார், இந்த வலைப்பூ உங்களுக்கானது இல்லை.
இல்லைன்னு சொல்றவங்க!
ஏன்னு சொல்ல முடியுமா?
இதுல என்ன பிரச்சினைன்னு சொல்ல முடியுமா?
என்ன செய்யணும்ன்னு சொல்ல முடியுமா?
பின்னூட்டத்தில சொல்லுங்க.
இந்த வலைப்பூவில கொஞ்ச நாளாவது முடிஞ்ச வரை நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ள உத்தேசம். அத்தோட பார்வைகளில என்ன தப்புன்னு சிலது சொல்லவும் உத்தேசம்.
பதிவுகளில நீங்களும் பங்கெடுக்கலாம். ஆரம்பத்தில பதிவுகளை எனக்கு அனுப்புங்க. அவற்றை ஆராய்ந்து வெளியிடுவேன். காலப்போக்கில உங்களை கோ ஆதராக்கூட ஆக்கலாம். யார் கண்டா?
மீடியா அலைஞ்சு திரிஞ்சி சரிபார்த்து வெளியிட்ட காலம்லாம் போச்சு. கக்கா போன இடத்துல மொபைல் நோண்டி ட்விட்டர்லயோ ஃபேஸ்புக்லயோ பேரோட ஷேர் பண்ணா ரெஸ்பான்ஸிபிலிடியும் இல்ல. முக்கியமா வருந்துகிறோம்னு சொல்ல வேண்டி வந்தா அத ஒரு அவமானமா நினைச்ச காலம் போச்சு. க்ரெடிபிலிடி பத்தி ஊடகத்துக்கும் கவலை இல்லை. சம்மந்தப் பட்டவங்களுக்கும் அக்கறை இல்ல. வ்யூவர்ஸ்/ஆடியன்ஸ்/பப்ளிக்குக்கு மீம் போட தேறிச்சேன்னு சந்தோஷம்.
ReplyDeleteஅந்த நாட்களில் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகவேண்டுமென்கிற ஆசை இருந்தது. நல்ல ஜார்னலிஸ்ட் பலருடைய அறிமுகம், ஆதரவு, பயிற்சி எல்லாம் கிடைத்தது. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்:
ReplyDeleteசெய்தியில் நல்லநான் முற்றும் துறந்த முனிவனுமல்ல தென்றும் கெட்டதென்றும் எதுவுமில்லை. எவருடைய பார்வை வழியாக செய்தியைப் பார்க்கிறோம் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.
ராஜாஜியை #மூதறிஞர் என்றும் #குல்லுகபட்டர் என்று சொன்னதும் ஒரே #நாறவாய் தான்! முதல் அடைமொழிக்குத் தேவை இருந்தது. அடுத்து #வசவு க்கும் தங்களை எதிர்க்கிறாரே என்கிற கோபமிருந்தது. ஆக இங்கே செய்தி அல்லது வார்த்தைகளைவிட யார் யாரைக்குறித்து எந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசினார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது மட்டுமே விவேகம்!
உதாரணத்துக்கு *நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல xyz படிதாண்டாப் பத்தினியுமல்ல* என்றவர்தான் #கம்பரசம் என்று ரசித்து ரசித்து அவர் பாணியில் எழுதினார்! கேள்வி கேட்காமல் #அறிஞர் என்று அடைமொழி கூடாக கொடுத்தார்கள்!
அம்மாடி... ஒரு வழியாய்....!
ReplyDeleteபாதி விஷயங்கள் இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிசம் என்ற பெயரில் ஊகத்திலும், வெறும் பரபரப்புக்காக கண்டதையும் போடும் ஊடகங்களாகவும் இருக்கின்றன. மேலும் அந்தந்த ஊடகங்களின் சார்பு நிலைக்கேற்ப செய்திகள் வெளியிடப்படுகின்றன. உண்மையான செய்தி என்பது நமக்கு கிடைக்கும் என்பது கனவுதான்.
ReplyDeleteஅட நானே கமெண்ட் போட முடியறதே!
ReplyDeleteஇந்த சூஸ் அன் ஐடென்டிடி ய தூக்க வழி சொல்லுங்கப்பா. நெட்ல தேடிப்பத்து அப்படித்தான் செட் செஞ்சு இருக்கேன்.
ReplyDeleteஇதற்கெல்லாம் சரியான ஆள் திண்டுக்கல் தனபாலன்தான்!
ReplyDeleteஇப்போது செய்தி வாசிப்பிலும் சரி சேகரிப்பிலும் சரி நேர்மை என்பதே இல்லை. அவரவர் சார்பு இயக்கங்களுக்கு ஆதரவான செய்திகளையே வெளியிடுகின்றனர். எல்லா செய்தி சானல்கள், பத்திரிகைகள் ஒட்டுமொத்தமாக ஆளும் கட்சி என்ன செய்தாலும் எதிர்ப்பு என்பதையே கொள்கையாக வைத்திருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் எந்த நல்ல திட்டங்களையும் எதிர்க்கின்றனர். அதற்காக ஓர் விவாத மேடை அமைத்து விவாதம் என்னும் பெயரில் அவர்களுக்குச் சாதகமாகப் பேசுகிறவர்களுக்கு மட்டும் பேச நேரம் கொடுக்கின்றனர். அதோடு தேவையே இல்லாமல் சடங்குகள், ஒரு சில பழக்கங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றைச் சாடுவதிலும் ஒரு பட்சமாக இருக்கின்றனர். உதாரணத்துக்குத்
ReplyDeleteதாலி தேவையா!" என்றொரு வாத, விவாதம் நடைபெற இருந்தது. பின்னர் அதிகமான எதிர்ப்பால் பின் வாங்கினார்கள். தவறு செய்பவர்களுக்கு ஆதரவான பேச்சு, குற்றம் செய்பவர்களையும் அதற்காக தண்டனை பெற்றவர்களையும் ஆதரிப்பது என ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதோடு அல்லாமல் இவற்றுக்கெல்லாம் "மனித நேயம்" என்னும் பெயரையும் கொடுத்து விடுகின்றனர். மக்களிடையே போராட்டங்களைத் தூண்டி விடுவதோடு அல்லாமல் அதற்காகத் தேவையின்றி விளம்பரமும் கொடுக்கிறார்கள். எல்லோருக்கும் தாங்கள் ஊடகத்தில் அடிக்கடி பேசப்படும் ஓர் நபராக இருக்கணும் என்னும் எண்ணமே தவிர உண்மையான செய்திகளோ, அரசு செய்யும் நல்ல திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்னும் உணர்வே இல்லை! கூடியவரை அவற்றைப் பற்றி ஏதும் பேசாமல் மறைக்கின்றனர். சமீபத்திய "கஜா" புயலில் கூட அரசு ஒரே சமயத்தில் எல்லா மாவட்டங்களிலும் சென்று பார்க்கவில்லை என்று குற்றம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 100 கிராமங்களுக்கும் மேல் சேதம் அடைந்திருக்கிறது. அனைத்தையும் ஒரே நாளில் பார்க்க முடியுமா? ஏதேனும் ஒன்றைப் பார்க்கச் சென்றால் அதை முழுமையாகப் பார்த்து அங்கே உள்ளவங்களுக்குத் தேவையானதைச் செய்யச் சொல்லி உத்தரவிட்டுப் பின்னரே அடுத்த கிராமத்துக்குப் போக முடியும்! அதோடு இல்லாமல் கிராமங்களை இணைக்கும் பாதைகள்/சாலைகள் மோசமான நிலையில். அவற்றைச் சரி செய்த பின்னர் தானே உள்ளேயே நுழைய முடியும்? அதோடு பல மரங்கள் விழுந்திருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டாமா? ஒரே சமயம் எல்லாமும் முடியுமா? இதை யாருமே எந்த ஊடகமுமே நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. குற்றப்பத்திரிகை வாசிப்பதில் தான் முனைப்புக் காட்டினார்கள்.