பல்கலை
பாலிடிக்ஸும் அரசு இயந்திர
மெத்தனமும் 70% நோயாளிகளில்
கான்சர் செலகளை அழிக்கும்
ஒரு இஸ்ரேல் தொழிற்நுட்பத்தை
ஏறத்தாழ கிடைக்காமல்
செய்துவிட்டது.
டெல்
அவைவ் பலகலை பேராசிரியர்கள்
யோனா கெய்சாரி, இட்ஷக்
கெல்சன் ஆகியோர் ஆல்ஃபா
கதிர்களால் கான்சர் செல்களை
அழிக்க விழைந்தனர். இந்த
கதிர் கான்சர் செல் டிஎன்ஏவின்
இரு இழைகளையும் உடைத்துவிடும்.
ஆனால் சுற்றியுள்ள
நல்ல செல்களை அழிக்காது.
பிரச்சினை
ஆல்ஃபா கதிர்கள் 50 மைக்ரான்
(1/20 மிமீ)
அளவே ஊடுருவும்.
பீட்டா,
காம்மா கதிர்கள்
அதிகம் ஊடுருவுமானாலும் அவை
ஒரு டிஎன்ஏ இழையை மட்டுமே
உடைக்கும். சமயத்தில்
செல் மீண்டும் உயிர்த்துவிடும்.
இக்கதிர்கள்
பக்க விளைவுகளை அதிகமாக
உருவாக்குவதுடன் நல்ல
செல்களையும் பதம் பார்த்துவிடும்.
ஒரு
5 செ.மீ
அளவு உள்ள கட்டிக்கு நூறாயிர
கணக்கான கதிர்கள் தேவைப்படும்.
ரேடியம் 224
என்னும் ஐஸோடோப்பை
கொடுக்கையில் அது கட்டிக்குள்
ஊடுருவி விடுவிக்கும் அணுக்கள்
3 மிமீ
வரை ஊடுருவும் கதிர்களை
விடுவிக்கின்றன. மேலும்
இது இம்யூன் சிஸ்டத்தை
தூண்டிவிட்டு கான்சர் செல்களை
அடையாளம் கண்டு அழிக்க தூண்டும்.
மேலும்
ஆராய்ச்சி தேவைப்பட்ட நிலையில்
இதன் காப்புரிமை பதிவு
செய்யப்பட்டதில் தகராறு
ஏற்பட்டு சிக்கலாகிவிட்டது.
இந்த சிக்கலை
விடுவிக்க யூஃஜி ஸோபர் என்பவர்
2015 இல்
நியமிக்கப்பட்டார்.
இவர் புதிய
நிறுவனம் ஒன்றை துவக்கி
சிக்கலை தீர்த்ததுடன் மேலும்
ஆராய்ச்சிக்கு நிதி உதவியும்
தேடிக்கொடுத்துள்ளார்.
மேலும்
படிக்க https://is.gd/5WeZzF
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!