சென்னைக்கும் சதுரங்கத்துக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது. சென்னையிலிருந்து பல சதுரங்க வீரர்கள் வெளிப்பட்டு இருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது மானுவல் ஆரான் என்று கேள்விப்படுவோம். அவர் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டர். இது வரை தமிழ் நாட்டில்
கிராண்ட் மாஸ்டர் -16
கிராண்ட் மாஸ்டர் (பெண்கள்) -3
இண்டர்நேஷனல் மாஸ்டர் - 30
இண்டர்நேஷனல் மாஸ்டர் (பெண்கள்) - 12
தோன்றியிருக்கிறார்கள். http://tamilchess.com/tn-gms-ims/
இந்த வரிசையில் இப்போது லேடஸ்ட் குகேஷ். உலக அளவிலேயே இளைய வயதில் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர். கடந்த 16 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற போட்டியில் ஜெயித்து இவர் அந்த தகுதியை பெறும்போது வயது 12 வருஷங்கள் 7 மாதங்கள் 17 நாட்கள். இது வரை தமிழ்நாட்டின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் ப்ரஞ்ஞானந்தா.
உலகிலேயே இளைய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி சர்ஜகின் (12 வருஷம் 7மாதம்) 2002 இல் ஏற்படுத்தியசாதனை இன்னும் முறியடிக்கப்படாமலே இருக்கிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!